புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2016

யோசித மீது வழக்கு தொடரப்படும் - கடற்படை

தற்போது யோசித ராஜபக்ஸ மீது நடாத்தப்படும் ஊழல் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கடற்படை சட்டத்தின் பிரகாரம் யோசித மீது வழக்கு தொடரப்படும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்கரம் அலவி இன்று தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள தமது உறவினர்களைப் பார்வையிட கே.சி.வெலகெதர அனுமதியின்றி ஒருதடவை வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்கு கடற்படை சட்டத்தின்படி இவரது பதவியிலிருந்து குறைந்த மட்டத்திற்கு பதவிக்கு மாற்றப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அனுமதியின்றி 25 தடவைகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட யோசிதவை கடற்படை தண்டிக்காதமைக்கான காரணம் என்ன? என்று இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கே கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மேலும், யோசிதவின் பதவியிலும் பார்க்க கே.சி.வெலகெதரவின் பதவி உயர்ந்தது எனவும், யோசித மேற்கொண்ட 72 வெளிநாட்டுப் பயணங்களில் 25 பயணங்கள் சட்டவிரோதமானவை எனவும் குறிப்பிட்ட அவர், யோசித கட்டாயம் தண்டிக்கப்படுவார் என இதன்போது கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்கரம் அலவி தெரிவித்தார்.

ad

ad