புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2016

காரைக்கால் வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி: சென்னை ஐகோர்ட்



இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினி மீது சுரேஷ் ஆசிட் வீசினார். ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த வினோதினி சிகிச்சைப் பலனின்றி பிப்ரவரி 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் மேல்முறையீடு செய்துள்ளார். சுரேஷின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர். 

ad

ad