புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

நடிகைகுத்து ரம்யாவுக்கு அமைச்சர் பதவி?

கர்நாடாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, இவர்களுக்கு
பதில் 14 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த அமைச்சரவை மாற்றத்திற்கு காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்துள்ளது, ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நடிகர் அம்பரீண் இதனை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், மாண்டியா தொகுதியின் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார், இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அதே ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான குத்து ரம்யாவை அமைச்சராக்க முதல்வர் சித்தராமையாவுக்கு பரிந்துரைத்துள்ளார்.
தற்போது எம்.எல்.ஏ.வாக ரம்யா இல்லாவிட்டாலும் கர்நாடகா சட்டமேலவை உறுப்பினராக்கி (எம்.எல்.எசி) அமைச்சரவையில் சேர்க்குமாறு ராகுல் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், கர்நாடகாவில் பெரும்பான்மையினரான ஒக்கலிகா சமூகத்தினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், தற்போது ராஜினாமா செய்துள்ள அம்ரேஷ் ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
எனவே, இவருக்கு பதிலாக அதே ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த ரம்யாவை களம் இறக்க ராகுல் முடிவு செய்துள்ளார், இதற்கிடையில் கழுவிய குட்டையில் மீன் பிடிக்கும் விதமாக பாஜக கட்சி, நடிகர் அம்ரேஷை தங்கள் பக்கம் இழுப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ad

ad