புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

தங்கையின் இழப்பை தாங்க முடியாமல் தீயில் குதித்த அண்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் தங்கை இறந்த சோகம் தாங்கிகொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெங்கராம்பாளையத்தை சேர்ந்த குமார்(26) மற்றும் குமாரி ஆகிய இருவரும் உடன்பிறந்தவர்கள் ஆவார். தனது தங்கை குமாரி மீது குமார் அலாதி பிரியம் கொண்டவர்
குமாரிக்கு திருமணம் ஆகி தனது கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார், இந்நிலையில் குமாரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதை அறிந்த குமார், அவரை பல மருத்துவர்களிடம் அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் குமாரி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுபற்றி அறிந்ததும் தனது குடும்பத்தினருடன் நல்லூர் பாளையத்துக்கு வந்த குமார், தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
குமாரியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன. குமாரியின் உடலை வீட்டில் இருந்து சுடுகாட்டிற்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். குமார் அழுதபடியே உடன் நடந்து சென்றார். சுடுகாட்டில் குமாரியின் உடலை தகனம் செய்தனர்.
அப்போது துக்கம் தாங்காமல் குமார் கதறியபடியே, தங்கை குமாரியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் எரிந்த தீயில் குதித்தார். இதனால் அவர் மீது தீப்பற்றி எரிந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த உறவினர்கள், அவரை வெளியே இழுத்தனர். மேலும் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் குமாரின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad