புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

உள்ளக பொறிமுறையின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண சந்தர்ப்பம்– அகில விராஜ்

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் சர்வதேசத்தின் ஆதரவுடன்  உள்ளக பொறிமுறையின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் “கடன் பயம், மரண பயம் மற்றும் சர்வதேச பயம் என்ற மூன்று விதமான பயங்கள் கடந்த காலங்களில் காணப்பட்டன. கடந்த காலங்களில் பாரிய கடன் சுமையால் நாடு திண்டாடியது எனினும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கடசி இணைந்து அந்த சுமையை ஓரளவு குறைத்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினாள் வெள்ளை வேன்களில் கடத்திச் சென்றனர். அல்லது கொலை செய்தனர். இல்லாவிடின் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர். எனினும் தற்போது அந்த பயம் இல்லாமல் போயுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் சர்வதேசம் வழங்கிய ஆதரவின் ஊடாக உள்ளக பொறிமுறையின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம், மண்சரிவு, சாலாவ வெடி விபத்து என குறுகிய காலத்திற்குள் இந்த அரசாங்கம் பாரிய பிரச்சினைகளை சந்தித்துள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்க எம்மால முடிந்தது. என்றாலும் தற்போதைய சூழலில் பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் மற்றுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டும் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் வரி எதிர்காலத்தில் நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும் போது முழுமையாக இல்லாமல் செய்யப்படும்.“ எனக் குறிப்பிட்டார்.

ad

ad