புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

இறுதி ஆட்ட்துக்கு ஒருபக்கமாக ஸ்பெயின் போர்த்துக்கல் போலந்து சுவிஸ் வேல்ஸ் ஆகிய அணிகளில் ஒன்றும் மறுபக்கமாக ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் பெல்ஜியம் அல்லது இத்தாலி அணிகளில் ஒன்றுமாக வந்து சேரலாம்

நாளை  முடியும் ஐரோப்பிய குழு  நிலை போட்டிகளின் முடிவில் என்ன நடக்கும்

ஐரோப்பிய கிண்ண  சுற்றில்  முதல்  குழு நிலையிலான போட்டிகள் நாளை   நிறைவுறவுள்ளன . இன்று   நான்கு போட்டிகள் பரபரப்பான   சூழலில் இடம்பெறும் . நாளை  போட்டிகள்  முடிய  ஆறு குழுக்களிலும்  முதலிரு இடங்களை பிடிக்கும்  12  நாடுகளும்  மூன்றாம் இடங்களை அடையும்  6  நாடுகளில்  மிகக்கூடிய புள்ளிகளை பெற்ற  நான்கு  நாடுகளும்  அடுத்த அரைக் காலிறுதி ஆடட த்துக்கு  நுழையும்  ஆக  நாளைய  தினம்   எட்டு நாடுகள்    வெளியேறுகின்றன . இப்போதே  வெளியேறியுள்ள  நாடுகள்  ருமேனியா ,ரஸ்யா ,உக்ரைன்  ஆகியன  அடங்கும் . இதுவரை  அரை  காலிறுதிக்குள் நுழைந்துள்ள நாடுகள்   பிரான்ஸ் ,சுவிட்சர்லாந்து ,வேல்ஸ் ,இங்கிலாந்து ஸ்பெயின் இத்தாலி  ஆகியனவாகும் .சுவிஸ்  குழு சீ இல் இரண்டாம் இடத்தை அடைய கூடிய  நாடுகளான  ஜெர்மனி  போலந்து  வட அயர்லாந்து ஆகியவற்றில் ஒன்றோடு மோதும்  சாத்தியம் உள்ளது .இங்கிலாந்து  குழு எப் இல் இரண்டாம் இடத்தை அடையும் நாட்டுடன் மோதும் .எனது எதிர்வு கூறலில் கால் இறுதி ஆட்டங்களில் எதிர்பாற்கும்  முடிவுகள் கிடைக்குமானால்  சுவிஸ் ஸ்பெயினையும் ,பிரான்ஸ்  இங்கிலாந்தையும் ,ஜெர்மனி  பெல் ஜியம் அல்லது இத்தாலியையும் சந்திக்கும்  நிலை  வரலாம் .இதுவரை முடிந்த குழுக்களில் மூன்றாம் இடத்தை அடைந்துள்ள நாடுக ள் மூன்று புள்ளியோடு  அல்பேனியாவும் நான்கு புள்ளிகளோடு  ஸ்லோவாக்கியாவும் காத்திருக்கின்றன .நாளை குழு நிலை போட்டிகள் முடிய  ஆறு குழுக்களிலும் மூன்றாம் இடத்தை அடைந்த நாடுகளில்   நான்கு மட்டும்  அடுத்த  சுற்றுக்கு  தகுதி பெறும் .இனி வரும் போட்டிகளில்  ஜெர்மனி உக்ரைனையும் போலந்து வட ஐர்லாந்தையும் செக் துருக்கியையும் ஸ்பெயின் குரோஷியாவையும் ஆஸ்திரியா  ஐஸ்லாந்தையும் இத்தாலி  ஐர்லாந்தையும்  பெல்ஜியம் சுவீடனையும்  வெல்லும் வாய்ப்பு  அதிகம்   உள்ளன .எனது இந்த எதிர்வு ஒழுங்கில் முடிவுகள் அமைந்தால் நான்கு புள்ளிகளை  எடுத்து மூன்றாம் இடத்தை  அடைந்த  ஸ்லோவாக்கியா  செக் ஆஸ்திரியா ஆகியன  தகுதி பெரும்  .இன்னும் அலெனியாவும்  வட அயர்லாந்து தலா மூன்று புள்ளிகளை  வைத்திருப்பதால்  கொல்விகித அடிப்படையில் இவற்றி ல் ஒரு  மட்டும்  தொடர    முடியும் . போர்த்துக்கல்  ஹங்கேரியை  வென்றாக வேண்டும் இல்லையேல்  வெளியேற வேண்டும் .ஆஸ்திரியா  ஐஸ்லாந்து ,ஸ்பெயின் க்ரோஷியா ,செக்  துருக்கி போட்டிகள்  கடும்  போட்டியாக  அமையும் . இறுதி ஆட்ட்துக்கு    ஒருபக்கமாக ஸ்பெயின் போர்த்துக்கல் போலந்து சுவிஸ் வேல்ஸ் ஆகிய அணிகளில் ஒன்றும்  மறுபக்கமாக  ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ்  பெல்ஜியம் அல்லது இத்தாலி  அணிகளில் ஒன்றுமாக  வந்து சேரலாம் 

ad

ad