புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

பொன்சேகாவிற்கான விசாவை மீண்டும் மறுத்தது அமெரிக்கா?

ன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்காகச் சமர்ப்பித்த நுழைவிசைவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,

ஏற்கனவே கடந்த ஆண்டு தனது புதல்விகளைப் பார்க்கச் செல்வதற்காக அமெரிக்க நுழைவிசைவு கோரியிருந்த போது, அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில் நுழைவிசைவு வழங்க அமெரிக்கா மறுத்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.

எனினும், சரத் பொன்சேகாவின் ஊடகச் செயலர் மகிந்த குமார, அமெரிக்க நுழைவிசைவு மறுக்கப்பட்டது பற்றிய தகவலை நிராகரித்துள்ளார்.

ad

ad