புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2016

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 60 பேர் மீது சென்னை கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு




டந்த 18ஆம் தேதி தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி கூடியதாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 19ஆம் தேதியும் தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி கூடியதாக மு.க.ஸ்டாலின் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுவது, ஏதோ ஒரு நோக்கத்துடன் நகர்ந்து செல்லுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் சென்னை கோட்டை காவல்நிலையத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 17-ந் தேதி பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேசிய எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுக்குழுவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாக கருத்து ஒன்றை தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தெரிவித்த அந்த கருத்தை சபாநாயகர் தனபால் அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளி நிலவியதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதோடு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் 79 பேர் 1 வாரம் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து கடந்த 18-ந்தேதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 89 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

19-ந்தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி சட்ட சபை கூட்டத்தை நடத்தினர். தலைமை செயலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் இந்த கூட்டம் நடந்தது. துரைமுருகன் சபாநாயகர் போல் அமர்ந்து போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினார். 

18-ந்தேதி நடந்த சம்பவம் தொடர்பாகவும், 19-ந் தேதி நடந்த சம்பவம் குறித்தும் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 18-ந் தேதி சட்டசபைக்குள் நுழைய முயன்றதாக மு.க.ஸ்டாலின் உள்பட 40 மீதும், 19-ந்தேதி அனுமதியின்றி கூடியதாக மு.க.ஸ்டாலின் உள்பட 60 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதியின்றி கூடுவது (இந்திய தண்டனை சட்டம் 143) ஏதாவது ஒரு நோக்கத்துடன் செயல்படுவது (188) ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ad

ad