புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2016

இந்திய மீனவரின் அத்துமீறல் குறித்து அடுத்தமாதம் பேச்சு

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்தியா சென்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்திருந்த அமைச்சர், அங்கு ஊடகங்களிடம் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் எதிர்வரும் நாட்களில் வடக்கில் உள்ள மீனவர்களையும், இந்திய மீனவர்களையும் இணைத்து பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குளங்களுக்கு அண்மித்த கிராமங்களை அபிவிருத்தி செய்யும் பாரிய நிகழ்ச்சித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், குறித்த திட்டத்தின் மூலம் குளங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களை அபிவிருத்தியடையச் செய்வதே பிரதான நோக்கமாகுமென தெரிவித்தார். அத்தோடு, மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்களுக்கு அவரவர் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் சகல திட்டங்களையும் இன, மத பேதங்களைக் கடந்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே இத்திட்டத்தை வடக்கிற்கு அறிமுகம் செய்வதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது குறிப்பிட்டார்

ad

ad