புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2016

காணாமல் போனோருக்கு நீதி வேண்டி வடக்கில் நடைபயணம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் போனோருக்கு நீதி வேண்டியும் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்க்கும் நடவடிக்கையை எதிர்த்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம்’ இன்று கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து ஐ.நா செயலகம் வரை சென்றுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு ஆனையிறவு உமையாள்புரம் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த நடைபயணம், கிளிநொச்சி ஐ.நா செயலகம் அமைந்துள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை மக்கள் பிரதிநிதிகள் கையளித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் மற்றும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நடைபவனியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, எஸ்.சிவமோகன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ad

ad