புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2016

நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலய வருடாந்த பொங்கல் விழா

நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலய வருடாந்த பொங்கல் விழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

இந்துக்களின் சிறப்புக்களின் ஒன்றான ஐயனாருக்கும் பரிபாலன மூர்த்திகளுக்கும் எடுக்கப்படுகின்ற உற்சவத்தில் ஒன்றாக நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் உற்சவம் 20.08.2016 அன்று ஆலய பூசகர் தலமையில் வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
இந்த ஆலயத்தில் இப்பிரதேசங்களில் எந்தவித அசம்பாவீதங்களும் நடை பெறக்கூடாது என வேண்டி ஆடு கோழி ஐயனாரின் பரிபாலன மூர்த்திகளுக்கு உயிர்பலி கொடுத்து இப் பூசை வருடந்தோறும் நடை பெற்று வருகின்றமை ஒரு அம்சமாகும்.
அந்த வகையில் இந்து ஆலயங்களில் நடை பெறுகின்ற புனிதமான நிகழ்வில் அதனை சமூக கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கோடு இரவு வேளைகளில் கலை நிகழ்வுகளாக இசைக்குழுக்கள் போடுவதனால் இதற்கென ஒரு கூட்டம் ஆலயங்களுக்கு சென்று தங்கள் வெறியாட்டங்களை காட்டி வருவதனால் ஆலயத்தில் குழந்தைகள் முதியோர்கள் என இவர்களின் கழியாட்டத்தினால் புழுதியினை கிண்டி ஆடுவதனால் சுகாதார ரீதியாக பாதிப்புக்கள் ஏற்பட்டு மூச்சு தினறல்களினால் இவர்கள் இடை நடுவில் தங்கள் வழிபாடுகளை நிறுத்தி வீடு செல்லும் நிலைக்கு ஆலய பரிபாலன சபையினர் வழிவகுத்து கொடுப்பதனால் பொலிசாரும் இக்; கழியாட்ட கூட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள். இதனை இந்து கலாச்சார அமைச்சும் மாவட்டம் பிரதேச செயலக கலாச்சார தினைக்களத்தினால் உடன் கவனம் செலுத்தப்பட்டு இது போன்ற நிகழ்வுகளை நிறுத்தப்பட்டு சமூக மட்டத்திலிருந்தும் பாடசாலை சமூகத்திலிருந்தும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை உருவாக்கி ஆலயங்கள் தோறும் நடைமுறைப்படுத்தி வந்தால் சமய கலாச்சாரம் பேணப்படுவதோடு இளைஞர்களுக்கிடையிலுள்ள றவுடித்தனமான செயல்களிலிருந்தும் இவர்களை மீட்டெடுக்க முடியுமெனவும் புத்தி ஜீபிகளும் கல்வி மான்களும் பொதுமக்களும் சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
unnamed (14)unnamed (15)unnamed (16)unnamed (17)unnamed (18)

ad

ad