-

24 ஆக., 2016

லண்டன் ஹோட்டலில் ரெய்டு.. 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்த கத்தார் இளவரசி சிக்கினார்?

லண்டனில் உள்ள சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தபோது கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா சிக்கியுள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஹோட்டல் அறை ஒன்றில் கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.
இங்கிலாந்து பாதுகாப்பு படையான எம்ஐ6 மற்றும் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருடன் சேர்ந்து ஒரு குற்றவாளியை தேடி நடத்திய ரெய்டில் தான் இளவரசி சிக்கியுள்ளார். அவரது ஐடியை சரிபார்த்த போது அவர் கத்தார் இளவரசி என்பது தெரிய வந்துள்ளது என இங்கிலாந்தை சேர்ந்த பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இளவரசியிடம் விசாரித்த பிறகு இங்கிலாந்து போலீசார் அங்குள்ள கத்தார் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்று அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது. ஷெய்கா சால்வா முன்னாள் பிரதமர் ஹமது பின் ஜச்சிம் பின் ஜபோர் அல் தானியின் மகள் ஆவார்.

ad

ad