புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

இந்தியா கொடுத்த தாவூத் இப்ராகிமின் மூன்று முகவரிகள் தவறு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தகவல்

இந்தியா கொடுத்த தாவூத் இப்ராகிமின் மூன்று முகவரிகள் தவறு என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுகுறித்து இந்திய அரசு சார்பில் பல்வேறு ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அங்கு இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா சார்பில் வழங்கப்பட்ட கோப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 முகவரிகள் சேர்க்கப்பட்டன. அவை தாவூத் அடிக்கடி சென்று வரும் இடங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அவற்றை ஆய்வு செய்த அல்கொய்தா மீதான தடைக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழு மூன்று முகவரிகள் தவறானவை என தெரிவித்துள்ளது. அத்துடன் தனது பட்டியலில் இருந்து அந்த முகவரிகளை நீக்கியுள்ளது. மற்ற 6 முகவரிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் இஸ்லாமாபாத் முகவரி ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதியின் வீட்டு முகவரி என்றும் கராச்சியில் உள்ள இரண்டு முகவரிகளும் தாவூத் முகவரி அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் அவ்வப்போது தனது முகவரிகளை மாற்றுவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad