புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

புலம்பெயர் மக்களின் முதலீடுகள் வடக்கில் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவும்: மாவை சேனாதிராஜா

வடக்கு மாகாணத்தில் புலம்பெயர் மக்கள், வெளிநாட்டவர்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடுகளை செய்ய முன்வந்தால்
, பொருளாதார நெருக்கடியினைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்முதலீடுகள் அரசியல் தீர்விற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டு, பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீடித்து வந்த யுத்த சூழலினால் எமது முதலீடுகளும், தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த முதலீட்டாளர் சம்மேளனம் முதலீடுகளின் ஆரம்பமாக அமையும். 
சர்வதேச சமூகமும் புலம்பெயர் தமிழர்களும் இதற்கு பங்களிப்பினை வழங்க வேண்டும். விதவைகள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், இழந்து போன இழப்புக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறான முதலீடுகள் மூலம் அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். 
பொது மக்கள் அரசியல் ஆணை கொடுத்திருக்கின்றார்கள், அந்த அரசியல் ஆணைக்கு ஏற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.  

தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்வது குறித்து தொடர்சியாக பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படும். அத்துடன், எமது வளங்களையும், சூழல்களையும் மாசுபடுத்தாமல் தொழிற்சாலைகள் மீளவும் செயற்படுத்த வேண்டும். ” என்றுள்ளார். 

ad

ad