புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

போலீஸ் நிலையத்தில் காதலன் கட்டிப்பிடித்து முத்தமிட்டதால் பரபரப்பு; மதுபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இளம்பெண் கைது

போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலையத்திலேயே
அவரை காதலன் கட்டிப்பிடித்து முத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

வேலூரில் நேற்று முன்தினம் பகலில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபரும் இளம்பெண்ணும் வந்தனர். நடுரோட்டில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவருடன் தகராறு ஏற்பட்டு இளம்பெண் அவரை தாக்கினார். இந்த சம்பவத்தால் அங்கு பொதுமக்கள் கூடியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக் டர் ராம்குமார் அங்குவந்து அவர்களை விலக்கி விட்டார். அப்போது சப்-இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்து இழுத்து அவரையும் அந்த பெண் தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். அப்போது அந்த வாலிபரும், இளம்பெண்ணும் குடிபோதையில் இருந்தனர்.

பெங்களூரு பெண்

இதுபற்றி சப்-இன்ஸ்பெக் டர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க போலீ சார் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இளம்பெண் பெங்களூருவை சேர்ந்த அர்ச்சனா (வயது 24) என்பதும், அவருடன் இருந்த வாலிபர் வேலூர் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த விவேகானந்த் (23) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், நீண்ட நாட்கள் கழித்து நேரில் சந்தித்ததால் இருவரும் ஓட்டலில் வைத்து மது அருந்திவிட்டு வந்தபோது போதையில் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.

கட்டிப்பிடித்து முத்தம்

விசாரணையின்போதே மதுபோதையில் இருந்த அர்ச்சனா, போலீஸ் நிலையத்தில் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தார். அவரை அடக்க முயன்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரையும் அர்ச்சனா, தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. மது போதையில் வாகனத்தை ஓட்டியதாக போலீசார் விவேகானந்த் மீது வழக்குப்பதிவு செய்ய முயன்றனர். 

அப்போது தனது காதலன் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று போலீஸ் நிலையத்திலேயே அர்ச்சனா கூச்சலிட்டார். தனக்கு ஆதரவாக பேசியதால் மகிழ்ச்சி அடைந்த விவேகானந்த், சினிமாவை மிஞ்சும் வகையில் போலீஸ் நிலையத்திலேயே அர்ச்சனாவை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

நாற்காலி உடைப்பு

இந்த தகவல் அறிந்த விவேகானந்தின் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவேகானந்த், எனது பெற்றோரையே போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விட்டீர்களா? என்று அருகில் இருந்த நாற்காலியை காலால் எட்டி உதைத்தார். இதில் அந்த நாற்காலி உடைந்தது. அப்போது அவரும் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.

அர்ச்சனாவும், விவேகானந்தும் போதையில் இருந்ததால் அவர்களை போலீசார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அதற்கான சான்று வாங்கினர். போலீசார் விவேகானந்த் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

பெண் கைது

ஆனால் அர்ச்சனாவை போலீஸ் நிலையத்திலேயே வைத்திருந்தனர். இதனால் பயந்துபோன அர்ச்சனா, “நான் தவறு செய்துவிட்டேன், என்னை விட்டுவிடுங்கள்” என்று போலீசாரின் காலில் விழுந்து கதறினார்.

போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதாக அர்ச்சனா மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ச்சனாவை கைது செய்தனர்.

இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad