27 பிப்., 2017

நெடுவாசலை காக்க 100 கிராமங்கள் திரண்டனர் ( ப

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் 16 ந்தேதி தொடங்கிய மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டமாக மாறியது.

இந்த நிலையில் இன்று நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைக் காக்க  அடுத்த கட்ட போராட்டம் பற்றி சுமார் 100 கிராம மக்கள் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் கூடி ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கூடியுள்ளனர்.