27 பிப்., 2017

யுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நலத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்க
வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.
யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ஏனைய மாகாணங்களை விட அதிகளவான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது தொழில்களை இழந்த சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கல், புனர்வாழ்வு அமைச்சினால் புனரமைப்புச் செய்யப்பட்ட கிராமம் கையளிப்பு ஆகிய நிகழ்வுகள் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்,
யுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்ற போதிலும் சில தரப்பினரின் செயற்பாடுகளினால் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தாமதமடைவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.