27 பிப்., 2017

தாவடிப் பகுதியில் ஆயுத தாரிகள் அட்டகாசம்

காங்கேசன்துறை வீதியில் தாவடிப் பகுதியில் 5 மோட்டார் சைக்கிளில் வாளுகள் பொல்லுகள் சகிதம் 12 பேர் ஓர் மோட்டார் சைக்கிளில்
சென்ற இளைஞனை ஓட ஓட விரட்டி அட்டகாசம் புரிந்தனர்.
தாவடிப் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் கொக்குவில் பகுதியில் இருந்து தாவடி நோக்கிய திசையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓர்இளைஞனை அதே திசையால் 5 மோட்டார் சைக்கிளில் 12 இளைஞர்கள் இவ்வாறு துரத்திச் சென்றனர்.
இதன் போது தாவனியில் புதிதாக அமைக்கப்படும் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு அண்மையில் உள்ள தனியார் கல்வி நிலையம் முடிந்து வெளியேறும் மாணவர்களை ஏற்றுவதற்காக நின்ற பெருமளவு பெற்றோர் பதறி பெரும் கூக்குரல் இட்டனர்.
இதேபோன்று அப்பகுதியை தாண்டிய ஆயுத தாரிகள் தாவடி மதுபானச் சாலையை அண்டிய பகுதியில் குறித்த இளைஞனை தாக்க முற்பட்டவேளையில் அவ் இளைஞன் மீண்டும் கொக்குவில் திசையை நோக்கித் தப்பியோடினான் .
இதனால் மீண்டும் ஆயுதாரிகள் பெரும் கூக்குரல் எழுப்பியவாறு துரத்திச் சென்றனர். இவ்வாறு மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பயணித்தவேளையில் தணியார் கல்வி நிலையம் முடித்து வீடுநோக்கிச் சென்றுகொண்டிருந்த ஓர் சிறுவனையும் தள்ளி விழுத்தியவாறு சென்றனர்.
இதேவேளை இவ்வாறு இந்தயத் திரைப்படப் பாணியல் பகல் வேளையில் இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்டதை அவதானித்த பயணிகள் அயலவர்கள் பதறிகூக்குரல் எழுப்பினார்.
இதேநேரம் யாழ்ப்பாணம் திசையில் இருந்து இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வீதிப் போக்குவரத்துப் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து அவர்களை அவதானித்து பிடிக்க முயன்றபோதும் முடியாத நிலையில் கைத் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்த முயன்றும் தாக்குதல் தாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.