4 மார்., 2017

ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு சுவிஸ் நாட்டு பாசல் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து பாசல் நகர மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் நகரசபை உறுப்பினர் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற கொடுமைகளை கேட்டறிந்ததோடு மிகுந்த கரிசனையோடு கலந்துகொண்ட மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கினார்.
பயணத்தை முன்னெடுத்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் மக்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு , எதிர்வரும் 6 .3 .2017 அன்று ஜெனிவா மாநகரில் நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் கலந்துகொண்டு மறுக்கப்படும் எமது உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.