4 மார்., 2017

சசிகலா நியமனம்: தினகரனின் கடிதத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் அணியினர்
தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இதற்கு, அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடிதம் வாயிலாக பதில் அளித்திருந்தார். தற்போது, தினகரனின் கடிதத்தை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கட்சியின் அதிகாரபூர்வ பதவியில் இருப்பவர் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். அதிமுகவின் எந்தவொரு அதிகாரபூர்வ பதவியிலும் இல்லாத டி.டி.வி.தினகரனின் கையெழுத்திட்ட பதிலை ஏற்க முடியாது. மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா விளக்க கடிதத்தை அனுப்ப வேண்டும். சசிகலாவின் கையெழுத்திட்ட கடிதத்தை அவர் சார்பாக வேறு யாரேனும் கூட அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.