4 மார்., 2017

அமெ. இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் மங்கள சந்திப்பு

அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­கள உயர் அதி­கா­ரி­க­ளு­டன், இலங்கை அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, ஜெனி­வா­வில் சந்­தித்­துப் பேச்­சுக்­களை நடத்­தி­னார்.
இந்­தச் சந்­திப்­பின் போது, இலங்­கை­யில்  நல்­லி­ணக்­கம் மற்­றும் ஆற்­ற­லைக் கட்­டி­யெ­ழுப்­பும் விவ­கா­ரங்­கள் குறித்து அமெ­ரிக்க உயர் அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­ய­தாக மங்­கள சமரவீர தக­வல் வௌியிட்­டார்.
அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­க­ளத்­தின், பூகோள குற்­ற­வி­யல் நீதிக்­கான பணி­ய­கத்­தின் சிறப்பு இணைப்­பா­ளர் ரொட் எவ் புஜ்­வால்ட் மற்­றும், அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்களத்தின் அனைத்­து­லக அமைப்­பு­க்கள் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரதி உத­விச் செய­லர் எரின் பார்க்லே ஆகி­யோ­ரு­ட­னேயே இந்­தப் பேச்­சுக்­கள் நடத்­தப்­பட்­டன. 
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னம் தொடர்­பான அடுத்த கட்ட ந­கர்­வு­கள் மற்­றும், அமெ­ரிக்­கா­வின் ஈடு­பாடு தொடர்­பாக இந்­தச் சந்­திப்­பின்  போது ஆராயப்பட்­ட­தா­க­வும் தெரி­ய­வ­ரு­கி­றது