மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பியோடி விட்டார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான பத்திரிகை ஆசிரியர் முதல் முறையாக மகிந்த ராஜபக்ச ஆட்சியில் கொலை செய்யப்பட்டார். அது லசந்த விக்ரமதுங்க. கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட மிக் கொள்வனவு தொடர்பான கட்டுரைகளை எழுதியதன் காரணமாவே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார். அது படைவீரன் செய்த கொள்ளை. அந்த படைவீரன் தற்போது நாட்டில் இல்லை. அமெரிக்காவுக்கு தப்பியோடியுள்ளார். தேர்தல் முடிந்ததும் எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைக்கு வருகிறார்.
கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். எனினும் அந்த படைவீரனான கோத்தபாயவை கைது செய்ய அனைத்தும் தயார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சிறைக்கு செல்வார். மிக் கொள்வனவு ஊழலில் கிடைத்த பணம் ஹொங்கொங் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை 5 இந்தியர்கள் வைப்புச் செய்துள்ளனர் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்