இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நேற்று இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று மட்டும் 158 குழந்தைகளுக்கு பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாகவும், மதுரை மற்றும் திருநெல்வேலி முகாம்களில் உள்ள 184 குழந்தைகளுக்கு இந்த பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வாரம் மட்டும் 1,500 குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களில், வேலூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், கடலூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து இலவசமாக தங்கள் சான்றிதழ்களை பெற இலங்கை அகதிகள் சென்னைக்கு வருவார்கள்.
மேலும், அகதிகள் முகாம்களில் 10,000 முதல் 11,000 வரையான குழந்தைகள் இருக்கின்றார்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டு 3,520 குழந்தைகளுக்கும், 2016இல் 1,469 குழந்தைகளுக்கும் பிறப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே எமது திட்டம் என இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாராவது இலங்கைக்கு தமது சொந்த விருப்பத்தில் திரும்பிச் செல்ல விரும்பினால், அவர் அவ்வாறு செல்வது சுதந்திரமாக இருக்க வேண்டுமென நான் தெளிவுபடுத்துகிறேன். எனவும் குறிப்பிட்டுள்ளார்.