புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மார்., 2019

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது உறுதி செய்யப்பட்டதுவிங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது உறுதி செய்யப்பட்டது

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என இந்திய விமானப்படை உறுதி செய்தது.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராக பயன்படுத்த வழங்கப்பட்ட எப் 16 விமானங்களை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்கொள்ளலாம் என அஞ்சும் பாகிஸ்தான் பயன்படுத்தவில்லை என மழுப்புகிறது. 27-ம் தேதி இருதரப்பு இடையே வான்பகுதியில் நடந்த மோதலில் மிக்21 பிசோன் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் ஏவிய ஆர்-73 ஏவுகணை எப். 16 விமானத்தை தாக்கியது.

பாகிஸ்தான் ஏவிய அம்ராம் ஏவுகணை அபிநந்தன் சென்ற விமானத்தை தாக்கியது என விமானப்படையின் தகவல் வெளியாகியுள்ளது.