புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2019

சுவிஸ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிய விதிகளுக்கு அமைய இலவச சட்ட ஆலோசனைகள்


புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறைகள் குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்ய சுவிஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுவிஸ் நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகளுக்கு அமைய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடைமுறைகள் 140 நாட்களுக்குள் ஃபெடரல் புகலிட கோரிக்கை மையங்களில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

2015இல் இதே நடைமுறைகளுக்கு சராசரியாக 280 நாட்கள் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

புதிய முறைமைகளுக்கு அமைய, தகுதியான அகதிகள் எவ்வளவு விரைவாக ஏற்றுக் கொள்ளப்படுவார்களோ, அதேபோல் சுவிஸின் பாதுகாப்பு யாருக்கு தேவை இல்லையோ அவர்களும் மிக விரைவாக வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது

ad

ad