புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மார்., 2019

ஜனாதிபதி சார்பில் ஐ.நா கூட்டத்தொடரில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன்


ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, தனது
பிரதிநிதிகளாக மூவரை அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) அறிவித்துள்ளார்.

இதற்கமைய, ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக வடமாகாண  சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம ஆகியோர் இம்முறை ஜெனிவா செல்லவுள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பழைய வடுக்களை கிளராது, நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வதற்கு இடம்தருமாறே இவர்கள் ஜெனீவாவில் கோரிக்கை விடுக்கவுள்ளனர என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்