புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 மே, 2019

இலங்கை குண்டுவெடிப்பு; சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவரை சுற்றி வளைத்த போலீசார்

இலங்கை குண்டுவெடிப்பு; சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவரை சுற்றி வளைத்த போலீசார்nt இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் ஒருவரை சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 21ந்தேதி காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


இந்த தாக்குதல்களில் இதுவரை 250 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் ஒருவர் பதுங்கி உள்ளார் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.