1 மே, 2019

ஐ.எஸ் தலைவருக்கு மைத்திரி செய்தியனுப்பினார்! பிரித்தானியாவின் ஸ்கை-நியூஸ் ஊடாக!

இலங்கையை வன்முறைக்களமாக மாற்றாமல் அந்தநாட்டை விட்டுவிலகி சென்றுவிடுமாறு சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபாலசிறிசேன ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல்பக்தாதிக்கு இன்று செய்தி அனுப்பியுள்ளார்.

பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி ஊடாக இந்த செய்தி பகிரங்கமாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்கை நியூசுக்கு செவ்வி வழங்கிய அவர் ஐ.எஸ்போன்ற பயங்கரவாதஅமைப்புகள் தற்போது சிறிய நாடுகளை இலக்குவைக்கும் புதிய தந்ரோபாயத்தை முடுக்கி விட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வெளியக பின்புலம் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் தாக்குதலாளிகள் வெளிநாடுகளிலுள்ளவர்களுடன் தொடர்புகளை பேணியமைக்கு சாத்தியங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்

செவ்வியின் ஒருகட்டத்தில், ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல்பக்தாதிக்கு உங்களிடமிருந்து ஏதாவது செய்தியுள்ளதா? என செவ்வியாளார் வினவினார். அதற்குப்பதிலளித்த மைத்திரிபால சிறிசேன தனது செய்தி மிகதெளிவானது எனக்குறிப்பிட்டு தனது நாட்டை விட்டுவிலகி சென்றுவிடுங்கள் என்பதே பக்தாதிக்குரிய செய்தி எனக் குறிப்பிட்டார்