ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்
சென்னை:
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு (புதன்கிழமை) அரங்கேறும் 50-வது லீக் ஆட்டத்தில் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.