புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 மே, 2019

சத்தியமூர்த்தியை சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமித்தமைக்கு மாவை ஆட்சேபணை!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை, யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் நியமித்தமைக்கு தனது ஆட்சேபணையை மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ளார்.
இந்த நியமனம் மாகாணங்களின் அதிகாரங்களை பிடுங்கும் ஒரு நடவடிக்கையென அவர் ஆட்சேபித்தார். வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனை தொலைபேசியில் அழைத்து, தனது ஆட்சேபணையை தெரிவித்தார் மாவை சேனாதிராசா.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்குபவர். மாகாண நிர்வாகத்தின் அலகான மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியில் த.சத்தியமூர்த்தியை நியமிப்பது, மாகாண அதிகாரத்தை பறிப்பதாக அமையும் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களின் அமையமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், எம்.பிக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தது.

இந்தநிலையில், அண்மையில் வடக்கு ஆளுனரை அழைத்து, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக நீடிக்கும் த.சத்தியமூர்த்தியை, யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எனினும், மத்திய சுகாதார அமைச்சின் கீழ் உள்ள இந்த விவகாரத்தில் தாம் தலையிடுவதில் உள்ள சிக்கலை, ஆளுனர், மாவை சேனாதிராசாவிடம் புரிய வைத்ததாக அறிய முடிகிறது.