4 ஜூன், 2019

7 போ் விடுதலை விவகாரம் குறித்து ஆளுநரிடம் கேட்டு சொல்கிறோம் – தமிழக அரசு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 போ் விடுதலை தொடா்பாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீா்மானத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டு தொிவிக்க தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் 2 வாரம் கால அவகாசம் கோாியுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறயில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து, தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீா்மானம் நிறைவேற்றியது. மேலும் அத்தீா்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே போன்று 7 போ் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக முதல்வா் பழனிசாமியும் தொிவித்துள்ளாா்.

இந்நிலையில் தங்களை முன்விடுதலை செய்யக்கோாி ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகியோா் கடந்த 2012ம் ஆண்டு தொடா்ந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் எம்.எம்.சுரேஷ், எம்.நிா்மல்குமாா் அமா்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்கறிஞா், ஏழுபோ் விடுதலை தொடா்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீா்மானம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை குறித்து கேட்டு தொிவிக்க இரண்டு வாரகால அவகாசம் வேண்டுமென கோாிக்கை வைத்தாா். அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனா்.