புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 ஜூன், 2019

றிசாட்டிற்கு பொலிஸ் விசாரணைக்குழு:உண்ணாவிரதமும் ஆரம்பம்?

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் தொடர்பான முறைபாடுகளை பெற்றுக்கொள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட பொலிஸ் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை முதல் 12ம் திகதி வரையில் முறைப்பாட்டை பதிவு செய்யலாமென பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதனிடையே மாத்தறையிலுள்ள விகாரையொன்றில் பிக்குகளில் ஒரு பகுதியினர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.


முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனினை கைது செய்ய கோரியே அவர்கள் இன்று தமது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்