புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 ஜூன், 2019

ஊடகங்களிடம் ஹக்கீம் வேண்டுகோள்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அமைதியற்ற சூழ்நிலையில் சந்தேகமும், நம்பிக்கையின்மையும் உருவாகியுள்ளது. இந்தத் தருணத்தில் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த ஊடகங்கள் பங்களிப்பு நல்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில், மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டும் வகையில், சில சம்பவங்களை மிகைப்படுத்தி அறிக்கையிட வேண்டாமென ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதாக குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சில பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதனால் முஸ்லிம் மக்கள் அச்சத்துடனும், மன உளைச்சலுடனும் உள்ளனர். அரசியல் தேவைகளுக்காக இயங்கும் சில ஊடகங்கள் ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றுமொரு சமூகத்தை தூண்டிவிடுவதன் மூலம் முரண்பாடு அதிகரிக்கின்றது. இதனால், அரசாங்க மற்றும் ஆளுங்கட்சி தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளும் நெருக்கடிக்கு உள்ளாவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்