புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஜூலை, 2019

சம்பந்தனின் முக்கிய நகர்வே! நல்லது நடக்குமா??

இது சரியான நேரத்தில் பேசிய பேச்சு என நினைக்கிறேன். வரப் போவது ஜனாதிபதி தேர்தல். ரணில் – மகிந்த – மைத்ரி தரப்பின் மும்முனை போட்டி நடக்கவிருக்கிறது.
மூன்று தரப்புக்கும் சிறுபான்மையினரது வாக்குகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். முக்கியமாக தமிழர் வாக்குகள். அடுத்தபடியாக முஸ்லீம்களது வாக்குகளும்தான்.

எதிர்வரும் 5 மாதத்துக்குள் மீண்டும் அரசியலமைப்பை பாராளுமன்றத்துக்கு கொண்டு வர கூட்டமைப்பு மற்றும் தமிழ் – முஸ்லீம் தரப்புகள் அழுத்தம் கொடுக்க சரியான நேரம் இதுதான்.

முதலில் வரப் போவது பாராளுமன்ற தேர்தல் அல்ல. ஜனாதிபதி தேர்தல். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னும் பாராளுமன்ற ஆட்சி ஒரு வருடத்துக்கு இருக்கும். ஜனாதிபதி தேர்தலுக்கு பின் கூட பாராளுமன்றம் கலையாது.

ஆனால் ஜனாதிபதி ஆக போட்டியிடுவோர் வெற்றி பெற சிறுபான்மை வாக்குகள் தேவை. ரணில் – மகிந்த – மைத்ரி ஆகியோர் எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் மூன்று தரப்பும் அரசயலமைப்பை ஆதரிக்காமல் இருக்க முடியாது.

எதிர்ப்பவர்கள் துண்டை போட்டுக் கொண்டு வீட்டில் தூங்க வேண்டியதுதான். அதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள்.

தமிழரது மனங்களை வெல்ல எல்லோரும் புதிய அரசியலமைப்பை ஆதரிக்க வேண்டி வரும். இந்த சாணக்கிய முடிவை எடுத்த சம்பந்தருக்கு இந்த இடத்தில் ஒரு சபாஷ் போட்டுத்தான் ஆக வேண்டும்.

சரியான இடத்தில் ஆப்பை சொருகிட்டார். யாரும் ஓடவும் முடியாது . ஒளியவும் முடியாது. சம்பந்தன் இங்கே பிக் பொஸ்.

இந்த சாணக்கிய காய் நகர்த்தலும் தோற்றால் சிறுபான்மையினத்துக்கு பெரும் தோல்விதான். வெல்ல எனது பிராத்தனைகள்.