புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2019

இலங்கை காய்கறிகளிலேயே கூடுதல் நச்சு

உலகில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

உலகில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொற்றா நோயினால் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கெக்கிராவ கல்வி பிரிவில் இரும்புச் சத்து, புரோட்டின் மற்றும் விற்றமின் குறைபாடுகளைக் கொண்ட பாடசாலை மாணவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலக உணவு திட்டத்தின் கீழ் ஊக்குவிப்பதற்காக அரிசியை இலவசமாக பாடசாலை மாணவர்களின் உணவுக்காக வழங்கும் வேலைத்திட்ட நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

உலக உணவு வேலைத்திட்டத்திற்கு அமைவாக விவசாய திணைக்கழம் அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்காக உற்பத்தி செய்யப்படும் அரிசியை பயன்படுத்தி இலவமாக பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது. வருடம் ஒன்றில் காய்கறி வகைகளுக்காக 3 இலட்சம் மெக்றிக்தொன் உரவகை பயன்படுத்தப்படுகின்றது. இதே போன்று கிருமி நாசினி பொருட்கள் 5 ஆயிரம் தொன் பயன்படுத்தப்படுகின்றது என்று சுட்டிக்காட்படுகின்றது

ad

ad