புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 ஆக., 2019

19' ஐ ரத்துச் செய்ய இணக்கம்

அடுத்து ஆட்சியமைக்கும் அரசாங்கத்தின் மூலம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக ஜனாதிபதி, பிரதமர் மட்டுமல்லாது சபாநாயகரும் நாட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று அதிகார தூண்கள் உருவாகி இருப்பது அரசாங்கத்தில் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் முன்னர், அதில் அடங்கியிருந்த ஷரத்துக்கள் தொடர்பாக உன்னிப்பாக ஆராய்ந்திருக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்