புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 ஆக., 2019

யாழ் சென்ற பெண்ணை காணவில்லை

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற வவுனியா காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்ற இளம் தாயை காணவில்லை என அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கணவரின் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்கு செல்லுவதாக தெரிவித்து கடந்த 27ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது நண்பியுடன் மோட்டார் சைக்கிலில் வவுனியா பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.இதன்போதே அவர் யாழ்ப்பாணம் சென்று சேராததை அடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது