புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 ஆக., 2019

வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட போட்டி: இன்றைய முதல்பாதி ஆட்டம் நிறைவு; வெற்றியீட்டிய அணிகளின் விபரம் வெளியானது

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியில் இன்று மாலை 3.30 மணிக்கு மூன்று போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று முடிந்துள்ளன.

இதன்படி கிளிநொச்சி உருத்திரபுரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் றிங்கோ ரைற்றான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணி 0 : 2 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.

அதேபோன்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மன்னார் எப்.சி அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் யுனைட்டட் அணி 1 :3 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது

முல்லைத்தீவு இரணைப்பாலை மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் வல்வை எப்.சி அணியை எதிர்த்து ஆடிவரும் முல்லை பீனிக்ஸ் அணி 0 :2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது