புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 பிப்., 2020

         மரண அறிவித்தல் /கண்ணீர்  அஞ்சலி 

         நல்லதம்பி நாகரத்தினம் 
(வரதீவு,ஊரதீவு புங்குடுதீவு 7/முல்லைத்தீவு சுதந்திரபுரம் ./வவுனியா .திருநாவல்குளம் )
புங்குடுதீவு (7) மடத்துவெளி வரதீவினைப் பிறப்பிடமாகவும் ஊரதீவினையும் முல்லைத்தீவு சுதந்திரபுரம், வவுனியா திருநாவுக்குளத்தினையும் வதிவிடமாக கொண்ட ஓய்வுபெற்ற கமநலசேவைத்திணைக்கள உத்தியோகத்தர் நல்லதம்பி நாகரெட்ணம் அவர்கள் இன்று (15.02.2020) இறைவனடி சேர்ந்துவிட்டார். இதனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம்.அவரது ஆத்மா இறையாற்றலில் கலக்க இறைவனை வேண்டுவோமாக....
தகவல்.
குடும்பத்தினர் சார்பாக,
து. சுவேந்திரன்
( மருமகன்)
 புங்குடுதீவு ஊரதீவு இளம் தமிழர் மன்றத்தின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரும்  ஊரதீவு சனசமூக நிலையம் , கிராம முன்னேற்ற சங்கம் ,பாணாவிடை சிவன் கோவில்  ஆகியவற்றில்  பல்வேறு நிர்வாக பொறுப்புகளில் இருந்துசமூகப்பணி ஆன்மீகப்பணியாற்றியவருமான அமரர்  ந நாகரத்தினம் அவர்களுக்கு  எங்கள்  கணீர் அஞ்சலியை  செலுத்துகிறோம் .அவரது ஆத்மா இறையாற்றலில் கலக்க இறைவனை வேண்டுவோமாக....