புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 பிப்., 2020

தந்தையால் கர்ப்பமாக்கப்படட 17 வயது மகள் -14 வயது சிறுமி தந்தையால் வன்புணர்வ


 வவுனியா மற்றும் மாங்குளம் பகுதிகளில், வெவ்வேறு சம்பவங்களில் மூன்று சிறுமிகள் உறவினர்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக
பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாள்களாக வீட்டில் இருந்த உறவினர் ஒருவர் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார். சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்தபோது தனக்கு நடந்த சம்பவங்களை சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோரால் பூவரசங்குளம் பொலிஸில் நேற்று மாலை செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய வன்புணர்வு குற்றச்சாட்டின்கீழ் உறவினரான 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து அவரது தந்தை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார். சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய சிறுமியின் தந்தையான 41 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாங்குளம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையையடுத்து அந்த சிறுமியின் தந்தையான 39 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமிகள் மூவரும் மருத்துவப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.