புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 பிப்., 2020

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா மீதான பயணத்தடைக்கு பேர்ள் அமைப்பு வரவேற்பு.!
போர்க்குற்றவாளியான சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப்பட்டமையை பேர்ள் அமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு அமெரிக்காவின் இந்தச் செயற்பாட்டிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளது

பேர்ள் எனப்படும் சிறிலங்கா சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் தன்னார்வ தொண்டு அமைப்பு அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சவேந்திர சில்வா இறுதி யுத்தத்தில் மனித குலத்திற்கு எதிரான படுகொலைகளில் ஈடுபட்டவர். லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் மீது கொத்துக்குண்டுகள், இரசாயனக் குண்டுகள் வீசி அவர்களைப் படுகொலை செய்ததில் இவருக்கு அதிக பங்கு இருக்கின்றது.

இவர் உட்பட, சிறிலங்காவில் போர்க்குற்றம் இழைத்த படையினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என தமிழர் நலன்பேணும் அமைப்புக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது.

இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்ட சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்ததை ஏனைய நாடுகளும் பின்பற்றவேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று, பேர்ள் அமைப்பின் செயற்பாட்டை ஏனைய தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் பின்பற்றி இந்தத் தடையை வரவேற்கவேண்டும் எனவும் தமிழ் மக்களும் தமிழர் நலன்பேணும் அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன