புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2020

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர் -

அதிபர் டிரம்ப்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது 50 பேர் பலியாகி உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436 ஐ தாண்டியுள்ளது, உலகெங்கிலும் 145 நாடுகளில் 145,810 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பின் மையப்பகுதியான சீனாவில் 80,824பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்றும் 3,189 இறப்புகள் (13 புதியவை) இன்று காலை வரை பதிவாகி உள்ளது.



கொரோனா வைரஸ் பரவுவது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இத்தாலி, ஈரான், ஐரோப்பா நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இத்தாலியில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 250 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 17 ஆயிரத்து 660 ஆகவும் உயர்ந்துள்ளது. ஈரானில் 11,300 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்றும் தென் கொரியாவில் 8,000பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 1,701 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 38 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது 50 பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனாட்ல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில், “தற்போது வரை, கொரோனா வைரஸ் காரணமாக 50 இறப்புகள் பதிவாகி உள்ளன. அந்த எண்ணிக்கையை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த வைரஸ் சீனாவிலிருந்து வெளிவந்தது, ஆனால் அதில் யாருடைய தவறும் இல்லை. அதை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த பிரச்சினையை விரைவில் தீர்ப்போம்” என்று கூறினார்.

முன்னதாக தீவிரமடைந்து வரும் கொரோனா வைரசை கையாள உதவும் வகையில், அமெரிக்காவில் தேசிய அவசரநிலையை அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad