புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 மார்., 2020

இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இன்றும் 600 பேர் இலங்கை வருகை!
உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றையடுத்து இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து விமானங்களின் ஊடாக இன்று இலங்கையை வந்தடைந்த சுமார் 600 பயணிகள் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை நாட்டை வந்தடைந்தோரில் முதலில் 450 பேர் 17 பஸ்களில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அதன்பின்னர் ஏனைய 150 பேரும் குறித்த கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இத்தாலி, ஈரான், தென் கொரியா, துபாய், கத்தார், மலேஷியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது