புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 மார்., 2020

கொரோனா அச்சுறுத்தல்! யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலவும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் இரு வாரங்களுக்கு விமான சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, இங்கிலாந்து, நோர்வே மற்றும் பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கான அனைத்து விமானங்களும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.