புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 மார்., 2020

கே வி தவராசாவுக்காக  குரல் கொடுக்குமா  புலம்பெயர் தீவக அமைப்புகள்
................................................................................................................
தீவக அமைப்புகளும் மக்களும் ஒன்று சேர்ந்து கே,வி.தவராசாவுக்கு தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டிய   கடமை  அழைக்கிறது குரல் கொடுப்போமா ?
  தேர்தல் காலத்தில் தீவக மக்களின் எதிர்பார்ப்பும்  ஒருமித்த விருப்புமாக  தென்படுவர்   தமிழருக்கு பல்வேறு வகையிலும்  தொண்டாற்றி ஆளுமை,  தகுதி ,மும்மொழிவல்லமை  ,சடடத்திறமை    அமைதியே உருவான   த னிக்குணம் என ஒருமித்த  உன்னதம் நிறைந்த மதிப்புக்குரிய  கே வி தவராசா  அவர்களே .அவருக்கு  இந்த காலத்தில்  இந்த தேர்தல் முடிய கிடைக்க வேண்டிய  ஒரு பதவி தேசியப்பட்டியல் மூலம்  பாராளுமன்ற உறுப்பினர் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது .கொழும்பு பிரதேசத்தில் கூட்டமைப்பு போட்டியிடலாம் என்ற ஆலோசனை  நிலையில் இருந்து  அந்த  முடிவை  எதோ ஒரு காரணத்துக்காக  தவிர்த்திருக்கும்  போதாவது இந்த தேசியப்ட்டியல்  வரிசைக்கு  தவராசாவுக்கு இடம் கொடுத்தேயாக வேண்டும் . இந்த முடிவை  கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சி  எடுக்குமானால்  கட்சிக்கு தலைநகரத்தில் ஒரு  பலத்தையும்  உதவியையும்  தீவகத்தில் பெரிய ஆதரவையும் எதிர்காலத்துக்கான  அத்திவாரத்தையும் போட்டுக்கொள்ள  உதவும் ,  அப்பிடி இப்பிடி  ஒரு  வலுவலுத்த நிலையில் இந்த பேசுபொருள் இருக்கும்  இந்த காலக்கடத்தில்  தவராசாவை   தேசியப்பட்டியல் வபிரிசையில் இடம் கொடுக்க  புலம்பெயர்  டெஹசங்களில்   பாரிய  பலத்துடன் இருக்கும்  தீவக அமைப்புகள் எல்லாமும்  மக்களுமாக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து  ஆதரவு  கொடுப்பதே  சாலச்சிறந்தது  இப்போதைய  இந்த சாத்தியமான  சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டு   பின்னாளில் கவலைப்படவேண்டிவரும் ஆதலால்  உறவுகளே   எழுமின் உறவுகளே