புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 ஏப்., 2020

முல்லைத்தீவு மக்களுக்கு இலவச கடல் உணவு விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து வறிய மக்களுக்கு கடல் உணவுகளை வழங்கும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில், இன்று முதற்கட்டமாக 460 குடும்பங்களுக்கு தலா ஒன்று முதல் 2 கிலோ நிறையுடைய கடல் உணவுகள் வழங்கப்பட்டன.இதில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர்,பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு உடல் உணவுகளை வழங்கிவைத்தனர்.

முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் இன்று இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இதற்கான கடல் உணவுகளை முல்லைத்தீவு கரைவலை உரிமையாளர்கள் இலவசமாக வழங்கியிருந்தனர்.

இந்த நடவடிக்கையை, எதிர்வரும் நாட்களிலும் இயன்றவரை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்