புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 ஏப்., 2020

புலம்பெயர்  தமிழ் நெஞ்சங்களே -  சற்றே நில்லுங்கள்
கொரோனாவினால்  அழிகின்றான்  தமிழன்
கொரோனா தாக்கத்தினால்  ஐரோப்பாவிலும் கனடாவிலும்  தமிழன் அவதிப்படுகிறா ன் .தயவு செய்து ஒற்றுமையாக  ஒன்று சேர்ந்து  கரம் கோர்ப்போம் பிரான்ஸ் பிரித்தானிய சுவிஸ்  போன்ற நாடுகளில் அந்த நாட்டு குடிமக்களோடு  தமிழினமும் பாதிக்கப்படுகிறது .சரியான  தகவல்கள்  இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்வதே இல்லை இறந்தச பின்னரே  தெரியவருகிறது . நிறைய தமிழர்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில்  இருப்பது  அறிய முடிகிறது .வாழ்வா சாவா என்று போராடுகிறான் .  லண்டன் பாரிஸ் போன்ற நெருக்கமா ன  நகரங்கள்  கூடிய பதிப்பில் உள்ளன வாழ்விலும் சாவிலும்  போராடத்திலும் ஒன்றிணைந்து நின்ற  தழமில் உயிர்கள்  போய்கொண்டிருப்பதை  பார்த்துக்கொண்டிருப்பது உறவுகளே  உங்களால் முடியும் . ஊடகங்கள்  தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் ஊர் ஒன்றியங்கள் பெரியோர்  அறிவாளிகள் என  ஒருகை கோர்த்து  செயலாற்றுங்கள் கழுத்துக்கு காத்துவரும் வரை  தாமதிக்க வேண்டாம் .  ஊடகங்கள்  தான்  இந்த இக்கட்டான நிலையில் பாரிய பணியா ற்ற முடியும் , நிறைய  தமிழர்  அரசுகளின்  எச்சரிக்கையை  அலடசியப் படுத்து கிறார்கள் . தமிழர்  சமூகமாக  குடும்பமாக  உறவுகளோடு கூடி குலாவி  வாழ்கின்ற கலாசாரம்  உள்ளவர்கள் .    காசு வசதி  நாளையும்  தேடலாம்  உழைக்கலாம்  உறவுகளை  எதிர்காலத்திலும் சந்திக்கலாம் கொண்டாடலாம் . உண்ண ல் உடுத்தல் குடித்தல் மகிழ்தல் உலாத்தல்  எல்லாமே  உயிர்  இருந்தால்  எப்போதும்  செய்து கொள்ள முடியும்  . சவூதி மன்னர் குடும்பம் கன டா பிரதமர்  மனைவி  ஸ்பெயின் ராணி  பிரிட்டிஷ் பிரதமர்  ஈரான்  பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்று    பதவி அந்தஸ்து  கோடீஸ்வரர்   என்றெ ல்லாம்  பார்க்காத  உயிர்கொல்லி  வைரஸ்  கொரோனா ,   வல்லரசுகளும்  முன்னேறிய நாடுகளுமே  தள்ளாடுகின்றன . பாரிய  பொருளாதார  நெருக்கடியிலும்  உயிர்களை பாதுக்காக்க போராடுகின்றன  கொஞ்சம்  அக்கறை காட்டுங்கள் , புலத்து தமிழரின் வாழ்வில்  தான் தாயக தமிழரும்  தொங்கி கொண்டிருக்கிறார்கள் .   அனைத்து தமிழரி ன்   உச்சகடட வளர்ச்சியே  பாதிக்கும் . தயவு செய்து  விழப்போடு இருங்கள் உறவுகளையும்  விழிப்புற  செய்யுங்கள் .