புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 ஏப்., 2020

தாவடிஇன்று காலை படையினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது

சிறீலங்கா படைகளால் தனித்து வைக்கப்பட்டிருந்த தாவடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி கிராமம் இன்று காலை படையினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனம்காண பட்டவரின் கிராமம் தாவடி ஆகும்.இந்த கிராமம் கடந்த சில நாட்களாக பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருந்ததுடன் கிராமத்தில் இருந்து வெளியேற மற்றும் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது.இந் நிலையில் இன்று காலை7.30 மணியளவில் இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.