புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2020

மட்டக்களப்பில் இருந்து நெல் வெளி மாவட்டத்துக்கு கொண்டு செல்ல தடை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றில் இருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தனர்.

அரசினால் அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப் பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் இன்று (13) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினியினால் பாதிக்கப்படாமலிருக்க அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் எனவும், மாவட்டத்தினுடைய அரிசித் தேவையினைப் பூர்த்தி செய்த பின்னரே பிற மாவட்டங்களுக்கு அரிசி விநியோகிக்க வேண்டும் எனவும், அரசின் கட்டுப்பாட்டு விலைக்கே அரிசி விற்பனை செய்ய வேண்டும். எனவும் அரசாங்க அதிபர் அரிசி ஆலை உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மாவட்டத்தின் எந்த இடத்திலிருந்தும் வியாபாரிகள் அரிசியினைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அதற்கான வசதிகள் செய்து தரப்படும் எனவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் இலாப நோக்கமற்று மக்களுக்கு சேவை வழங்க முன்வர வேண்டுமென அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்

ad

ad