புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2020

கொரோனா அச்சுறுத்தல்: நம்பிக்கை தரும் முன்னேற்றத்தில் இத்தாலி, பிரான்ஸ் – உலக முழுவதும் உள்ள நிலை

கொரோனா வைரஸ் தாக்கத்தால், இத்தாலி, பிரான்ஸில் ஞாயிற்று கிழமை அன்று குறைந்த அளவு இறப்பு ஏற்பட்டுள்ளது.உலகில் ஞாயிற்று கிழமையில் மொத்தம் 5,399 கொரோனா வைரஸால் இறப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த அளவில் 114,101 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில், இத்தாலி முதலிடத்தில் உள்ளது. ஆனால், ஞாயிற்று கிழமையில், 431 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். இது கடந்த மூன்று வாரத்தில் இல்லாத அளவு மிக குறைவாகும்.

அதேபோல் பிரான்ஸ் நாட்டிலும், 315 பேர் உயிரிழந்துள்ளன. அதற்கு முந்தைய நாள், 345பேர் உயிரிழந்தனர்.

மருத்துவ வசதிகள் மிக குறைந்த அளவில் இருந்தாலும், இத்தாலியில் கடந்த சில நாட்களுக்குள் அதிக அளவு பரிசோதனை உள்ளிட்டவை அதிகரித்ததால், அதற்கான பயனை கண்டடைந்துள்ளதாக தெரிகிறது.


அதேபோல் அமெரிக்காவில், கடந்த 24மணி நேரத்தில் 1,514பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் அந்நாட்டில் 22,023பேர் பலியாகியுள்ளனர். நியூயார் நகரில், 6,898பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் அமெரிக்காவில் 555,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Johns Hopkins பல்கலைகழகத்தின் தரவுபடி, கடந்த மூன்று மாதத்தில் 1.8 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களில், 2,805,892பேர் மீண்டுள்ளனர்.

சிங்கபூரை பொறுத்தவரையில், 233 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். மொத்தம் அந்நாட்டில் 2,532பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad